பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் #justiceforSushantforum, #CBIEnquiryForSushant என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் பலரும் ட்ரெண்டாக்கி வந்தனர்.
சுஷாந்த் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரது நெருங்கிய நண்பர்கள் உட்பட 23 பேரிடம் விசாரனை மேற்கொண்டனர். அதுவும் இவரது உடற்கூறாய்வு அறிக்கையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று (ஜூன் 27) மும்பை பந்தரா காவல் நிலையத்தில், யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்.ஆர்.எஃப்) காஸ்டிங் இயக்குநர் ஷானு சார்மாவிடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.
சுஷாந்த் சிங் யஷ் ராஜ் தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கிய ‘ஷுத் டெசி ரொமான்ஸ்', திபாகர் பானர்ஜி இயக்கிய 'டிடெக்டிவ் பொமேஷ் பக்ஷி' ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், மூன்றாவதாக சேகர் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் நடிக்கவிருந்த 'பானி படத்தை இந்நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், திடீரென இந்த படத்தில் இருந்து யஷ் ராஜ் பிலிம்ஸ் பின்வாங்கியது. இதனால் இந்த விசாரணை நடைபெற்றிருக்கலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.