பாலிவுட் நடிகை சன்னி லியோன், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது சமூக வலைதளப் பக்கங்களை பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
இவர் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இவர் நடிகையாக மட்டுமல்லாது தொழிலதிபர், சமூக சேவகி எனப் பன்முகத்தன்மையுடன் வலம்வருகிறார்.
சர்ச்சைக்குப் பஞ்சமில்லாத சன்னி
இத்தகைய அளவில் பிரபலமடைந்த சன்னி லியோன், சினிமா வாழ்க்கையில் சந்திக்காத சர்ச்சைகள் இல்லை. ஆனால், அதை எல்லாம் கடந்து மக்கள் மனத்தில் இடம்பிடித்துள்ளார்.
![Sunny Leone](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12123480_sunnydsad.jpg)
இவர், 2018இல் டேனியல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள், இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகின்றனர்.
கவர்ச்சிக்கு லீவ்விட்ட சன்னி
சமீபகாலமாக கவர்ச்சிக்கு விடுமுறை விட்டிருந்த சன்னி லியோன், நேற்று தனது சமூக வலைதளத்தில் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளார்.
![sunny-leone](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12123480_sun.jpg)
சம்மருக்கு இப்படித்தான் இருக்கணும்
அதில், அவர் தனது உடலை பெரிய சைஸ் தொப்பி மட்டும் வைத்து மறைத்துக் கொண்டு தூணில் சாய்ந்து நிற்கிறார். மேலும், அப்புகைப்படத்தை சம்மர் வந்துவிட்டது என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அப்போ சம்மர்ல இனி இப்படித் தானானு ரசிகர்கள் புகைப்படத்தைப் பகிர்ந்துவருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபல ஃபோட்டோகிராபரான டாப்பூ ரத்னானிதான் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இவள் சம்மர் 'சமியா'... சூடேற்றும் சென்னை மாடல்