லன்ச் பாக்ஸ், பி கே, சமீபத்தில் வெளிவந்த அங்க்ரேஸி மீடியம் உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் இர்ஃபான் கான்.
நடிகர் இர்ஃபான் கான் தனியாக மும்பையிலும், அவரது தாய் ஜெய்ப்பூரிலும் வசித்து வந்த நிலையில், இர்ஃபானின் தாய் உடல் நலக் குறைவு காரணமாக அவருடைய 85 வயதில் நேற்று ஜெய்ப்பூரில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பயணம் செய்ய முடியாததால், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தன் அன்னைக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலிவுட் பிரபலங்களும் இயக்குநர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த விபத்துக்கு பின் நான் திருந்திவிட்டேன் - மனம் திறந்த 'ஜோக்கர்'வகீன் ஃபீனிக்ஸ்