தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து, அங்கேயே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் தமிழில் '16 வயதினிலே', 'மூன்றாம் பிறை', 'சிகப்பு ரோஜாக்கள்', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மூன்று முடிச்சு', 'புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மாம்'. இப்படி 300 படங்களுக்கும் மேல் நடித்த ஸ்ரீதேவி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி துபாயில் உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.
-
Missing you Janu. Happy Birthday! #JanhviBirthday pic.twitter.com/QcMBHV5bOV
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) March 6, 2016 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Missing you Janu. Happy Birthday! #JanhviBirthday pic.twitter.com/QcMBHV5bOV
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) March 6, 2016Missing you Janu. Happy Birthday! #JanhviBirthday pic.twitter.com/QcMBHV5bOV
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) March 6, 2016
ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின், அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் 'தடக்' என்ற இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஸ்ரீதேவிக்கு பாலிவுட் சினிமா வட்டாரம் அளித்து வந்த அதே ஆதரவு அவரது மகளுக்கும் கிடைத்தது.
இதனையடுத்து மகள் ஜான்வி கபூருக்கு 2016ஆம் ஆண்டு ஸ்ரீதேவி தனது சமூக வலை தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பதிவு, தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், 'மிஸ் யூ ஜானு... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று பதிவிட்டு ஜான்வி மொட்டை தலையுடன், பாவடை சட்டை அணிந்த குழந்தை காலப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த ட்வீட்டும் புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.