ETV Bharat / sitara

ஜாக்கிரதையாக இருங்கள்...எனது பெயரில் போலி தொண்டு நிறுவனம்: எச்சரித்த சோனு சூட் - சோனு சூட் பெயரில் போலி தொண்டு நிறுவனம்

மும்பை: கரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு உதவி வரும் நடிகர் சோனு சூட், தனது பெயரில் போலி தொண்டு நிறுவனம் தொடங்கி நிதி வசூல் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு யாரும் நன்கொடை அளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sonu Sood
Sonu Sood
author img

By

Published : May 18, 2021, 5:10 PM IST

Updated : May 18, 2021, 9:12 PM IST

கரோனா பொது முடக்கம் காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப, போக்குவரத்து வசதி செய்து கொடுத்து நற்பெயர் பெற்றவர், நடிகர் சோனு சூட். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, அதன் மூலம் அவர் வழங்கி வருகிறார். கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நிகழ்வு குறித்து புத்தகம் ஒன்றையும் சோனு சூட் வெளியிட்டிருந்தார்.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், சோனு சூட் தன்னால் முடிந்த அளவு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

இந்நிலையில், சோனு சூட் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். என் புகைப்படத்துடன் எனது பெயரில் போலி தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மக்களிடம் நன்கொடை வசூலிப்பதாகத் தெரிகிறது. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அப்படி யாராவது உங்களிடம் நன்கொடை கேட்டால் அவர்களை உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" எனக் கூறியுள்ளார்

Last Updated : May 18, 2021, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.