ETV Bharat / sitara

'மகளே ஆலியா பட் இந்தாண்டு உனக்கு வெற்றிகரமாக அமையட்டும்' - சோனி ரஸ்தான் - ஆலியாபட் பிறந்தநாள் வாழ்த்துகள்

ஆலியா பட்டுக்கு ஒரு வயதாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது தாய் சோனி ரஸ்தான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Alia Bhatt
Alia Bhatt
author img

By

Published : Mar 15, 2020, 11:45 AM IST

பாலிவுட்டில் இளம் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆலியா பட்டிற்கு ரசிகர்கள் ஏராளம். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா ரசிகர்களுடன் தொடர்பில் இருந்துவருகிறார்.

ஆலியா தனது 27ஆவது பிறந்தநாளை இன்று (மார்ச் 15) கொண்டாடிவருகிறார். இவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் நடிகையும் ஆலியாபட்டின் தாயுமான சோனி ரஸ்தான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆலியாபட் குறித்து உணர்வுப்பூர்வமான பதிவை இட்டுள்ளார். அதில், "எனது மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! நீ குழந்தையாக இருந்தபோது எப்படி வாழ்ந்தாயே அப்படியே இப்போதும் வாழ்ந்துவருகிறாய். நீ திட்டமிட்டபடிதான் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால் ஒரு தாயாக உன்னை மிகவும் நேசிக்கிறேன். உன்னைப் பற்றி அக்கறை கொள்கிறேன். பாதுகாப்பும் ஆரோக்கியமும் அவசியமான இந்த நாள்களில் நீ மிகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்தாண்டு உனக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைய நான் பிரார்த்திக்கிறேன். அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள். அன்புடன் அம்மா" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ஆலியா பட் ஒரு வயது குழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.