ETV Bharat / sitara

நானே சொல்றேன்… ஆனா இப்ப அது இல்ல - கர்ப்ப வதந்திகளுக்கு சோனம் கபூர் பளிச் - கர்ப்பம் குறித்த வதந்திகளுக்கு சோனம் கபூர் பதில்

கர்ப்பம் குறித்த வதந்தி, கரோனாவுக்கு இந்தியாவில் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களை இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலின்போது பேசினார் நடிகை சோனம் கபூர்.

Sonam talks about her pregnancy, lauds Indian govt for corona awareness
Actress sonam kapoor
author img

By

Published : Mar 20, 2020, 1:12 PM IST

மும்பை: கர்ப்பமாகியிருப்பதாகப் பரவிவரும் வதந்திகளுக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூர் பளிச் பதிலளித்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகையான சோனம் கபூர், சமீப காலமாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அத்துடன் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. இதையடுத்து அவர் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் பரவியது.

அதற்குத் தனது இன்ஸ்டாகிராமில் நேடியாக ரசிகர்களுடன் உரையாடியபோது பளிச்சென பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “எனது கர்ப்ப செய்தி குறித்து உலகத்துக்கு நானே அறிவிப்பேன். ஆனால் இப்போது நான் கர்ப்பமாக இல்லை” என்றார்.

சமீபத்தில் கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் லண்டன் சென்றிருந்த சோனம் கபூர், கரோனா தொற்று பீதிகளுக்கிடையே பத்திரமாக நாடு திரும்பினார். இதுபற்றியும் விவரித்த அவர், “லண்டன் விமான நிலையத்தில் கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைவருக்கும் மேற்கொள்ளும் அடிப்படை கண்டறிதல் சோதனை செய்யப்படாதது அதிர்ச்சி அளித்தது.

ஆனால் அதே சமயம் டெல்லியில் வந்து இறங்கியவுடன் விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் கரோனா அறிகுறி இருக்கிறதா என்ற அடிப்படை சோதனை செய்தனர். இந்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திரைப்பட விழாக்களின் சிவப்பு கம்பள வரவேற்புகளில் பாலிவுட் நடிகைகள் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனென்றால் பெரும்பாலான நடிகைகளுக்கு கைகுலுக்குவதில் விருப்பமில்லை.

தற்போதயை சூழலில் பல நடிகர், நடிகைகள் தொடர்ந்து படப்பிடிப்புகளுக்குச் செல்வதைப் பார்க்கிறேன். இது எவ்வளவு பொறுப்பற்றது என்பதை அவர்கள் உணர்ந்து, பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். உடல்நிலை மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார்.

கடந்தாண்டு வெளியான தி ஸோயா ஃபேக்டர் படத்தில் கடைசியாகத் தோன்றினார் நடிகை சோனம் கபூர். இதையடுத்து தயாரிப்பாளர் சுஜாய் கோஷ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தாண்டின் மத்தியில் இப்படம் தொடங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா: ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கிய சோனம் கபூர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.