சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து 2018-இல் வெளியான திரைப்படம் "கனா". சீனாவில் இன்று(மார்ச்.18) 10,700 திரையரங்குகளில் வெளியாகிறது.
2.0 படத்திற்குப் பிறகு சீனாவில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் "பாகுபலி" "கனா" என்று தொடர்ந்து இரண்டு தென்னிந்திய திரைப்படங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது.
இந்த இரு படங்களிலும் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த பெருமையைப் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சத்யராஜ் படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தோழி' ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் - தனுஷ் ட்வீட்!