நடிகை ஷகிலா அறிமுகம்
'ஷகிலா' என்ற பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம், தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதைதான். 1990களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே பெரும் சாவாலாக இருந்தது.
ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
ஷகிலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் 'ஷகிலா' என்னும் பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார். இவருடன் பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக், சந்தீப் மலானி நடித்துள்ளார்கள். சமி நன்வானி, சாஹில் நன்வானி ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்திய மொழிகளில் வெளியாகும் ஷகிலா
இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, வயது வந்தோருக்கான படங்களில் நடித்ததற்காக, குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை, அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது. இப்படம் நேரடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.
ஷாகிலா திரைப்படம் வெளியாகும் தேதி
தற்போது இந்த படம் கிறிஸ்துமஸ் வெளியிடாக 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகிவுள்ளது. திரைத்துறையில் 1990களில் ஆண் ஆதிக்கம் மத்தியில் ஒரு நடிகையாக முன்னேறுவதற்கு அவர் சந்தித்த இன்னல்கள், சோதனைகள் உள்ளிட்டவை இந்த ட்ரெய்லரில் படக்குழுவினர் வெளிப்படுத்தியுள்ளனர். கேரளா பகுதிகள் போன்று இருக்கவேண்டுமென கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி பெங்களூருவின் Innovative Film City யில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. டைட்டில் பாடல் பாலிவுட் இசையமைப்பாளர் Meet Bros இசையமைத்துள்ளார். மற்ற இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் வீர் சமர்த் இசையமைத்துள்ளார்.

ஷகிலா படத்திற்கு தணிக்கைகுழுவினர் பாராட்டு
படத்தில் கையாளப்பட்டுள்ள தீரமான மொழியான்மைக்காவும், மிக கனமான காட்சிகளுக்காகவும் படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் தணிக்கை குழுவினர் இப்படத்தின் கருத்துக்களை பாரட்டி தங்களின் நன்மதிப்பை வழங்கியுள்ளனர்.