ETV Bharat / sitara

'வார்த்தை போர் வேண்டாம்... அன்பாக பேசி பழகுங்கள்' - ஷாருக் ட்விட்! - ஷாருக்கான்

"ட்விட்டரில் வார்த்தை போர் வேண்டாம். அன்பாக பேசி பழகுங்கள்" என்று, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஷாருக்கான்
author img

By

Published : Mar 24, 2019, 7:50 PM IST

இயக்குநர் அனுராக் சிங் இயக்கத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள 'கேசரி' திரைப்படம் மார்ச் 21 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஒடிக்கொண்டிருக்கிறது. 'கேசரி' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளதால் படத்தின் வசூல் ஐம்பது கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சினிமா ரசிகர் ஒருவர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்தை கிண்டலடிக்கும் வகையில், 'ஹோலி பண்டிகையில் வெளியாகியுள்ள 'கேசரி' படத்தின் அறைநாள் வசூல்தான் தீபாவளி தினத்தன்று வெளியான 'ஜீரோ' படத்தின் மொத்த வசூல்' என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு இயக்குநரும் 'கேசரி' படத்தின் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், ரசிகரின் ட்விட்டுக்கு லைக் செய்துள்ளார்.

இதனால் வெறுப்படைந்த ஷாருக்கானின் ரசிகர்கள் #ShameOnKaranJohar என்ற ஹேஷ்டாக்கின் மூலம் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து கரண்ஜோஹரை பழி தீர்த்தனர். இந்திய அளவில் ட்ரெண்டாகி பாலிவுட் பிரபலங்களை திணற வைத்துள்ளது. இந்நிலையில், இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்களுக்கு ட்விட் செய்துள்ளார்.

அதில், 'நான் இதில் உள்ள சில விளக்கங்களை வெறுக்கிறேன். கரண்ஜோஹர் தொழில்நுட்ப ரீதியாக சவாலானவர். தனது ரசனையிலும் உடுத்தும் ஆடையிலும் நல்ல குணங்களைக் கொண்டிருக்கிறார். அதுபோல ட்விட்டரும் நமது வாழ்க்கையை போலத்தான். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் தரவேண்டிய அவசியமில்லை. தவறுகள் இயல்பானவை. எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ளவும். அனாவசிய வார்த்தை போர் வேண்டாம்... அன்பாக பேசி பழகுங்கள்... அது இன்னும் இனிமை தரக்கூடியதாக இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

body

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.