ஹைதராபாத்: சுஷாந்த் சிங் நினைவுநாளன்று சாரா அலிகான் அவர் குறித்து பதிவிட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நேற்று (ஜூன் 14) நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நினைவு தினம் ஆகும். இதையொட்டி பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருடனான நினைவை பகிர்ந்தனர்.
சுஷாந்த் உடன் ‘கேதர்நாத்’ படத்தில் இணைந்து நடித்த சாரா அலி கான், எனக்கு எப்போது உதவி தேவை என்றாலும் நீ அங்கு இருப்பாய். என்னை நடிப்பு உலகத்துக்கு அறிமுகம் செய்தவன் நீ, கனவுகள் நனவாகும் என என்னை நம்ப வைத்தாய், இப்போதிருக்கும் அத்தனையும் நீ கொடுத்தது. நீ இல்லை என்பதை இப்போதும் நம்ப முடியவில்லை. நட்சத்திரங்களை பார்க்கும்போதும், உதிக்கும் சூரியன் அல்லது நிலவை பார்க்கும்போதும் நீ இங்குதான் இருக்கிறாய் என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு சுஷாந்தை பிடிக்காது என்பது எங்களுக்கு தெரியும், நடிக்க வேண்டாம் என சாரா அலி கானை கலாய்த்து வருகின்றனர்.
வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தால் சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்டார் என பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. சாரா அலி கானும் வாரிசு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.