நடிகர் சைஃப் அலிகானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார். இவர் தற்போது ஆனந்த் எல். ராயின் இயக்கத்தில் அக்ஷய்குமார் தனுசுடன் உருவாகிவரும் 'அட்ரங்கி ரே'என்னும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டிருந்தது. இதில் சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டியும், பரிசுகள் வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.
ரக்ஷா பந்தனைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, சாரா அலி கான் தனது தம்பி இப்ராஹிம் அலிகானுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சாரா தனது சகோதரருடன் மூன்று படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவற்றில் இரண்டு படங்கள் அவரது சகோதரனின் முதுகில் ஏறி இருப்பது போன்றும், மற்றொன்று இருவருமே சைக்கிளுடன் போஸ் கொடுத்துள்ளனர்.
இது குறித்து சாரா தனது இன்ஸ்டாகிராமில் எழுதியதாவது, "எனது சகோதரனுடன் நான் போட்டோ எடுத்துக் கொள்ள அவனுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த நாள் எங்களுக்கு மிகவும் வேடிக்கையானது. மகிழ்ச்சியானது. என்னால் விவரிக்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
சகோதர சகோதரிகளின் இந்த பிணைப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள வாசிகளின் கவனத்தை ஈர்த்து அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து சாரா நடித்துள்ள புதிய படமான 'கூலி நம்பர் 1' (1995ஆம் ஆண்டு வெளியான 'கூலி நம்பர் 1' படத்தின் ரீமேக் ஆகும்).