ETV Bharat / sitara

'ராதே' சல்மான் கானின் முந்தைய படங்களின் சாயல் - சல்மான் கானின் தந்தை விமர்சனம் - சல்மான் கானின் ராதே

மும்பை: நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'ராதே' திரைப்படம் சிறப்பான திரைப்படம் இல்லை என சல்மான் கானின் தந்தையும் 'ராதே' படத்தின் கதாசிரியருமான சலீம் கான் தெரிவித்துள்ளார்.

Salman
author img

By

Published : May 28, 2021, 8:36 PM IST

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராதே'. இதில் சல்மான் கானுடன் மேகா ஆகாஷ், திஷா பதானி, பரத் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். 'வெடரன்' என்னும் தென்கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த ரம்ஜான் தினத்தன்று திரையரங்கில் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக, படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்த நிலையில், இந்தாண்டு ரம்ஜான் வெளியீடாக இந்தப் படம் ஓடிடி தளமான 'ஜீ 5'இல் மே 13ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படத்தை, ஓடிடி தளத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் நாளில் பார்த்துள்ளதாக ஜீ 5 தெரிவித்துள்ளது. தற்போது 'ராதே' படத்தின் கதாசிரியரும் சல்மான்கானின் தந்தையுமான சலீம் கான், தனது விமர்சனத்தைக் கூறியுள்ளார்.

அதில், " சல்மான் கானின் முந்தைய படங்களின் சாயல் 'ராதே'வில் இருக்கிறது. 'ராதே'வுக்கு முன்பு வெளியான 'தபாங் 3' வித்தியாசமாக இருந்தது. 'பஜ்ரங்கி பைஜான்' நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. வணிக ரீதியான சினிமாவுக்கு பணத்தை ஈட்டித் தரவேண்டிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் சல்மான் கான் தன் வேலையை செய்து வருகிறார்.

அவர் படத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் லாபமே. மற்றபடி 'ராதே' அவ்வளவு சிறப்பான படம் ஒன்றும் இல்லை. பாலிவுட்டில் நல்ல கதாசிரியர்கள் இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் இந்தி, உருது இலக்கியங்களைப் படிப்பதில்லை. வெளிநாடுகளில் பார்க்கும் விஷயங்களை இந்தியத் தன்மைக்கு மாற்ற முயல்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.