ETV Bharat / sitara

விவசாயத்தில் களமிறங்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்! - Latest Bollywood news

பாலிவுட் நடிகர் சல்மான்கான், ஊரடங்கு காலத்தில் விவசாயப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சல்மான் கான்
சல்மான் கான்
author img

By

Published : Jul 20, 2020, 6:34 PM IST

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது பண்ணை வீட்டில் செட்டிலாகி உள்ளார். அங்கு சைக்கிள் ஓட்டுவது, குதிரை சவாரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு தனது நேரத்தைச் செலவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சல்மான் கான் விவசாயியாகக் களமிறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ஒரு டிராக்டகர் கொண்டு உழவு வேலை செய்ய, அவருக்குத் துணையாக ஒருவர் டிராக்டரில் பயணிக்கிறார்.

மேலும் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல், அவர் வயலில் வேலை செய்வது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சல்மான் கான், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது உடல் முழுவதும் சேறு பட்ட நிலையில் உள்ள ஒரு புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.