பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் 'பதான்’ திரைப்படத்தை, சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விரைவில் இணையவுள்ளதாக சல்மான்கான் தெரிவித்துள்ளார் தற்போது, அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து சல்மான்கான் கூறுகையில், " வாழ்க்கை செல்ல செல்ல, காட்சிகள் மாறும். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் பதான் படத்தில் இணையவுள்ளேன். பின்னர், டைகர் படத்திலும், கபி ஈத் கபி தீபாவளி படத்திலும் இணையவுள்ளேன். எட்டு மாதங்களுக்குப் பிறகு, கலர்ஸ் சேனலில் வரவுள்ள பிக்பாஸ் சீசன் 15க்கு நிச்சயம் வருவேன்" எனத் தெரிவித்தார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஷாருக்கானுக்கு, திருப்புமுனையாக பதான் திரைப்படம் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.