ETV Bharat / sitara

கபில்தேவின் நடராஜர் ஷாட்...ரன்வீர் வெளியிட்ட புகைப்படம் - 83 படத்தின் புதிய ஸ்டில்

முதல் முறையாக உலகக் கோப்பை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணத்தை தந்த கபில்தேவ் அண்ட் கோ-வின் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் "83" படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை அதன் நாயகன் ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்
author img

By

Published : Nov 11, 2019, 12:12 PM IST

மும்பை: கபில்தேவ் ஆடிய பிரபல நடராஜர் ஷாட் புகைப்படத்தை நடிகர் ரன்வீர் சிங் தனது "83" படத்திற்காக அவரின் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற புரொண்டன்ஷியல் உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

அந்த உலகக் கோப்பையில் கபில்தேவ் அண்ட் கோ மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாக வைத்து "83" என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. இந்தியில் தயாராகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது. படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங்கும், அவரது மனைவி ரோமி தேவாக தீபிகா படுகோனேவும் நடிக்கிறார்கள்.

கோலிவுட் நடிகர் ஜீவா, தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார். மேலும், பார்வதி நாயர், போமன் இரானி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இதர தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தனது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டார் ரன்வீர் சிங். அச்சு அசல் இளவயது கபில்தேவ் போல் தோற்றித்தில் இருந்த ரன்வீரின் லுக் இணையத்தில் ட்ரெண்டானது.

இதைத்தொடர்ந்து 1983 உலகக்கோப்பையில் கபில்தேவ் விளையாடிய ட்ரேட் மார்க் ஷாட்டான நடராஜர் ஷாட் ஆடியிருக்கும் ரன்வீர் சிங், அதன் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

மேலும் படிக்க: '83' பார்ட்டியில் ரன்வீர் - தீபிகாவின் ரெமாண்டிக் மொமண்ட்!

Intro:Body:

Ranveer singh shares Kapil dev Natarajar shot Ranveer singh in 83 movie 83 movie cast 83 movie release date 

கபில்தேவ் நாடராஜர் ஷாட் கபில்தேவ் 1983ஆம் உலகக் கோப்பை 83 திரைப்படம் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் 83 திரைப்படம் 83 திரைப்படம் ரிலீஸ் தேதி 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.