ETV Bharat / sitara

இது விமான பயணமா... விண்வெளிப்பயணமா - ரகுல் ப்ரீத் சிங் புதிய வீடியோ! - ரகுல் ப்ரீத் சிங் புதிய படங்கள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் விமானத்தில் செல்லும்போது பிபிஇ கிட் அணிந்திருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்
author img

By

Published : Jun 12, 2020, 3:12 AM IST

கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மார்ச் இறுதி வாரம் முதல் மே வரை உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் விமான சேவைகள் தொடங்கின. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றை அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்கின்றனர்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் இயக்குநர் லக்ஷ்ய ராஜ் ஆனந்த் இயக்கத்தில் 'அட்டாக்' என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக மும்பையிலிருந்து ரகுல் ப்ரீத் சிங்கும், லக்ஷ்ய ராஜ் ஆனந்தும் டெல்லிக்கு விமானத்தில் சென்றனர்.

அதற்காக இவர்கள் மும்பை விமான நிலையத்திற்கு சென்றபோது அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. அதை அணிந்திருந்த ரகுல் ப்ரீத் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, # மிஷன் ஃப்ளைட்... ஹாய் தோழர்களே, நாங்கள் இப்படித்தான் பயணிக்க இருக்கிறோம் எனக் கூறியவாறு கேமிராவை லக்ஷ்ய ராஜ் ஆனந்த் பக்கம் திருப்புகிறார். லக்ஷ்ய ராஜ் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறைகள் அணிந்தவாறு நான் விண்வெளிக்கு செல்கிறேன் என நினைக்கிறேன் என்று கூறினார்.

லக்ஷ்ய ராஜ் 'அட்டாக்' செய்ய தயாராக இருக்கிறார் எனக் ரகுல் ப்ரீத் சிங் கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், அட்டாக் படத்தின் படப்பிடிப்பை விரைவில் நடத்துவோம் என நம்புகிறோம். தகுந்த இடைவெளியை பின்பற்றி உள்ளோம் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.