ஹைதராபாத் : பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜன.5) பஞ்சாப் சென்றார். அப்போது அவரின் பயணத்தின்போது பாதுகாப்பில் குறைபாடுகள் ஏற்பட்டன.
நாடு முழுக்க இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரணாவத், “பிரதமருக்கு ஏற்பட்டுள்ள அவமதிப்பு 140 கோடி இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
இது குறித்து மேலும் அவர், “பஞ்சாபில் நடந்தது வெட்கக்கேடானது, மாண்புமிகு பிரதமர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்/ பிரதிநிதி / 1.4 பில்லியன் (140 கோடி) மக்களின் குரல், அவர் மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்.
இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். பஞ்சாப் பயங்கரவாத செயல்களின் மையப்புள்ளியாக மாறி வருகிறது. இந்தத் தீவிரவாத செயல்களின் மையப்பகுதியை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால், தேசம் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் #bharatstandswithmodiji” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் ரூ.42 ஆயிரத்து 750 கோடிக்கு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைக்க பஞ்சாப் சென்றிருந்தார்.
அப்போது அங்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அவரால் திட்டத்தை தொடங்கிவைக்க முடியாமல் பாதியில் டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : திருப்பதியில் கங்கனா ரணாவத் சுவாமி தரிசனம்!