வட இந்தியாவில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதமிருந்துக் கொண்டாடும் பண்டிகை கர்வா சௌத். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபடி தன் கணவர் நிக் ஜோனஸுடன் இந்த பண்டிகையை கொண்டாடியுள்ள பிரியங்கா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தனது கணவர் நிக் ஜோனஸின் ஜோனஸ் ப்ரதர்ஸ் இசைச் சுற்றுலாவில் பரபரப்பாக உள்ள போதிலும், திருமணத்திற்குப் பிறகான தன் முதல் கர்வா சௌத்தைக் கொண்டாடித் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படங்களை பிரியங்கா பகிர்ந்திருக்கிறார்.

சிவப்பு நிற ஆடையுடன், கைகளில் சிவப்பு வளையல்கள் அணிந்தும், மெஹந்தியிட்டும் கணவர் நிக்குடன் கர்வா சௌத் கொண்டாடியுள்ள ப்ரியங்கா “நான் ஜோனஸ் ப்ரதர்ஸ் கான்சர்ட்டில் கர்வா சௌத் கொண்டாடுகிறேன், இந்த முதல் கர்வா சௌத்தை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் நடிகை சோனாலி பிந்த்ரே, பிரபல நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், அவரது குடும்பத்தினர் ஜெயா பச்சன், ஸ்வேதா பச்சன் உள்ளிட்ட பெண்கள் பலருடன் இணைந்து கர்வா சௌத் கொண்டாட்டத்திலிருக்கும் புகைப்படத்தையும், தன் கணவரும் இயக்குநருமான கோல்டீ பெஹ்லுடன் கர்வா சௌத் கொண்டாடும் புகைப்படத்தையும் வெளியிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், பிபாஷா பாசு தன் கணவர் கரண் சிங் க்ரோவருடனும், ஷில்பா ஷெட்டி தன் கணவர் மற்றும் நடிகைகள் ரவீனா டேண்டன், சுனிதா மற்றும் பல பாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து கர்வா சௌத் கொண்டாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: