நடிகை பிரியங்கா சோப்ரா, விரைவில் வெளிவரவிருக்கும் தனது ’த ஒய்ட் டைகர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தனது கதாபாத்திரம் குறித்த ’ஃபர்ஸ்ட் லுக்’ புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அறிமுக நடிகர் ஆதர்ஷ் கௌரவுடன் பிரியங்கா படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் இந்தப் புகைப்படம், அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்ற புத்தகமான ’த ஒயிட் டைகர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகரான ராஜ் குமார் ராவும் நடித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில், இப்புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா, இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறும் முதல் தலைமுறை பெண்ணான ’பிங்கி’ எனும் கதாப்பாத்திரத்தில் தான் இப்படத்தில் தோன்ற உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு தனது கணவருடன் தொழிலை விரிவு செய்வதற்காக சென்று குடியேறும் அவரது வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'மாஸ்டர்' போனஸ் ட்ராக் 'க்விட் பண்ணுடா' வெளியீடு!