டெல்லி: சுதந்திர போராட்டத்தின் போதும், நம் நாட்டை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றி வரலாற்றை உருவாக்கிய தனித்துவமான பங்காற்றிய வலிமையான மற்றும் அச்சமற்ற பெண்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அற்புதமான பெண்களான அம்ரித் கவுர், அருணா ஆசாஃப் அலி, கேப்டன் லட்சுமி சாகல், துர்காவதி தேவி, கமலா நேரு, கனக்லதா பாருவா, கஸ்தூர்பா காந்தி, கிட்டூர் ராணி சென்னம்மா , ஜான்சியின் ராணி லட்சுமிபாய், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபலானி மற்றும் உதா தேவி ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க: சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்த தேசிய இணைய சுகாதார திட்டம் - மோடி