ETV Bharat / sitara

மீண்டும் காதலைக் கண்டடைய உதவிய பிள்ளைகள் - மனம் நெகிழும் பூஜா பேடி - பூஜா பேடி

90-களின் பிரபல பாலிவுட் நடிகை பூஜா பேடி தனது இந்நாள் காதலரை விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், அதற்கு தன் மகனும் மகளுமே காரணம் என மனம் நெகிழ்ந்துள்ளார்.

காதலர், மகன், மகளுடன் பூஜா பேடி
காதலர், மகன், மகளுடன் பூஜா பேடி
author img

By

Published : May 14, 2020, 1:30 PM IST

90-களின் பிரபல பாலிவுட் நடிகை பூஜா பேடி, திருமண முறிவு, சில கசப்பான அனுபவங்களைக் கடந்து ஒருவரை திருமணம் செய்யவுள்ள நிலையில், அதற்கு தன் மகள் அலயாவும், மகன் ஓமரும் உறுதுணையாய் இருந்ததாக மனம் நெகிழ்ந்துள்ளார்.

தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில், இது குறித்து பேசிய அவர், தன்னுடைய வாழ்வில் வந்த அத்தனை ஆண்களையும் தன் குழந்தைகள் விரும்பியுள்ளதாகவும், தன் முன்னாள் கணவர் வேறொரு திருமண வாழ்வில் நிலைத்து தற்போது எப்படி மகிழ்ச்சியாக உள்ளாரோ, அதே போல் தானும் மகிழ்ச்சியுடன் வாழ விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஃபரான் ஃபர்னிச்சர்வாலாவைத் திருமணம் செய்து அந்தத் திருமண வாழ்க்கை முறிவுக்கு வந்த நிலையில், மற்றொரு காதல் வாழ்வைத் தொடங்க பூஜா போராடி வந்தார். ஆனால் இடைப்பட்ட காதல் உறவுகள் மனக்கசப்புகளை தந்த நிலையில், தற்போது தன் பள்ளிகால சீனியர் மாணவரான மனெக் என்பவருடன் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி காதலில் விழுந்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் மனெக்குடனான நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் பூஜா, என்றைக்குமே புயலுக்கு பின் அமைதி தோன்றும் என்பதை தன் ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார்.

முன்னதாக பூஜா பேடியின் மகள் அலயா எஃப், சைஃப் அலி கான் உடன் ’ஜவானி ஜானேமன்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முகக்கவசத்துடன் வெளியே வந்த பிரியங்கா சோப்ரா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.