டெல்லி: கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாள்கள் கழித்து பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு இருப்பதை நடிகர் பவேஷ் ராவல் தனது ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், “எதிர்பாராதவிதமாக கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே என்னுடன் கடந்த 10 நாள்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
65 வயதாகும் ராவல் இம்மாத தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி பேட்டுக்கொண்டு, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
பரேஷ் ராவல், சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். தற்போது அவர் கரோனா பாதிப்புக்கு உரிய சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: 'துருவங்கள் பதினாறு' இந்தி ரீமேக்கில் வருண் தவான்!