ETV Bharat / sitara

கங்கனா ரணாவத்துக்கு எதிரான புகார்: நேரில் ஆஜரான ஹிருத்திக் ரோஷன்! - ஹிருத்திக் ரோஷன் செய்திகள்

மும்பை: நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிரான புகார் குறித்து விளக்கமளிக்க நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பை குற்ற புலனாய்வு துறைக்கு முன் நேரில் ஆஜராகியுள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு எதிரான புகார்: நேரில் ஆஜராகியுள்ள ஹிருத்திக் ரோஷன்!

author img

By

Published : Feb 27, 2021, 10:55 PM IST

நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடந்த 2016ஆம் ஆண்டு புகார் கூறியிருந்தார். அதில் தன்னுடைய பெயரில் ஆள் மாறாட்டம் செய்து தனக்கு தெரிந்தவர்களுக்கு கங்கனா மெயில் அனுப்புவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனை ஏற்க மறுத்த கங்கனா, அந்த இ-மெயில் ஐடியை ஹிருத்திக் ரோஷன் தான் தனக்கு வழங்கியதாகவும், தாங்கள் இருவரும் அதன் மூலமே அடிக்கடி பேசி பழகியதாகவும் தெரிவித்தார்.

நேரில் ஆஜராகியுள்ள ஹிருத்திக் ரோஷன்

இதனையடுத்து கங்கனா தனக்கு அடிக்கடி மெயில் அனுப்பி தொந்தரவு செய்ததாக ஹிருத்திக் காவல் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் இன்று (பிப். 27) நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிரான புகார் குறித்து விளக்கமளிக்க நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பை குற்ற புலனாய்வு துறைக்கு முன் நேரில் ஆஜரானார்.

இதையும் படிங்க... கங்கனா மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடருமாறு புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.