பாலிவுட்டில் 1952ஆம் ஆண்டு பாரத் பூஷன் - மீனாகுமாரி நடிப்பில் வெளியான படம் பைஜு பவ்ரா (Baiju Bawra). கிளாசிக்கல் இசையை மையமாகக் கொண்ட இப்படத்தை விஜய் பாத் இயக்கியிருந்தார்.
தற்போது இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி, ரீமேக் செய்ய உள்ளார். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
”ரன்வீர் தற்போது வேறு ஒரு படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனால் இப்படத்தில் தற்போது அவரால் நடிக்க முடியாது. எனவே ரன்பீர் கபூர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் கதைப்படி இரண்டு முக்கியக் கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒன்றில் ரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார். மற்றொரு கதாபாத்திரத்திற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ரன்பீர் கபூர் இப்படத்தில் நடிக்க வாய்மொழியாக ஒப்புக்கொண்டார்.
ரன்பீர் கபூரை உறுதி செய்யப்பட்டுள்ளபோதிலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளின் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில், இப்படம் குறித்தான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பன்சாலி தற்போது அலியா பட் நடிப்பில் உருவாகிவரும் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என தகவல்கள் வந்துள்ளன.
சஞ்சய் லீலா பன்சாலியின் ’சாவரியா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரன்பீர் கபூர், இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டால் 13 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் லீலா பன்சாலியின் ரீமேக் படத்தில் ரன்வீர் இல்லை ரன்பீர்! - ரன்பீர் கபூர் புதிய படங்கள்
மும்பை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவிருக்கும் 'பைஜு பாவ்ரா' ரீமேக்கில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.