ETV Bharat / sitara

தங்கை இறந்த செய்தி கேட்டபின்னும் நடிப்பைத் தொடர்ந்த நவாசுதீன் - உருகிய இயக்குநர் - மார்பக புற்றுநோய்

தங்கை இறந்த செய்தியை கேட்டபின்னும் நவாசுதீன் சித்திக் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்றதாக ’No Land's Man' இயக்குநர் முஸ்தபா சர்வார் ஃபரூகி தெரிவித்துள்ளார்.

Nawazuddin act after hearing sisters death news

author img

By

Published : Dec 13, 2019, 6:37 PM IST

'பேட்ட' படத்தில் சிங்காரம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் அறியப்படுபவர் நவாசுதீன் சித்திக். இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். வங்கதேச இயக்குநர் முஸ்தபா சர்வார் ஃபரூகி இயக்கத்தில் உருவாகி வரும் 'No Land's Man' என்ற படத்தில் நவாசுதீன் நடித்து வருகிறார்.

நீண்டகாலமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாசுதீனின் தங்கை சியாமா, சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவர் இறந்த செய்தி கேட்டபோது நவாசுதீன் படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளார். சிறிது நேரம் கலக்கமாக இருந்த நவாஸ், படப்பிடிப்பை சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு, தன் ஊருக்குச் சென்றிருக்கிறார். அதன்பிறகு தான் இயக்குநருக்கு நவாசுதீனின் தங்கை இறந்த செய்தி தெரிந்திருக்கிறது.

Director Mostofa Sarwar Farooki and Nawazuddin

'No Land's Man' படத்தில் நவாசுதீன் தங்கையாக நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரும் சியாமா, இதுகுறித்து இயக்குநரிடம் நவாசுதீன் கேட்டிருக்கிறார். நான் 5 வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை இது, உங்கள் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியாது என இயக்குநர் முஸ்தபா கூறியிருக்கிறார். இந்த சம்பவங்கள் பற்றி முஸ்தபா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக எழுதியிருக்கிறார்.

இதையும் வாசிங்க: நவாசுதின் சித்திக்குக்கு சர்வதேச விருது!

Intro:Body:

Nawazuddin Siddiqui's sisiter death news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.