சுஷாந்த் சிங் மரணத்துக்கு ரியா சக்ரபோர்த்திதான் காரணம் என அவரை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு நபர்கள் அவருக்கு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த ரியா, நான் கொலைகாரி என விமர்சித்தீர்கள்... அமைதியாக இருந்தேன். என்னை வசைபாடினீர்கள்... அமைதியாக இருந்தேன். ஆனால், நான் அமைதியாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, கொலை செய்வேன், பாலியல் வன்புணர்வு செய்வேன் என மிரட்டும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது. இவையெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் அவர் சைபர் கிரைம் போலீஸை டேக் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ரியாவின் புகாரை ஏற்ற மும்பை சாண்டாக்ரஸ் காவலர்கள், இரண்டு இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">