ETV Bharat / sitara

திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் சூப்பர் ஹீரோ 'சக்திமான்'!

மும்பை: 'சக்திமான்' தொடரை தற்போது திரைப்படமாக எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சக்திமான்
சக்திமான்
author img

By

Published : Oct 2, 2020, 6:54 PM IST

90’ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவரும், சற்றும் யோசிக்காமல் சொல்லும் பெயர் 'சக்திமான்'.

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் இந்தியன் சூப்பர் ஹீரோ 'சக்திமான்'.
சாதாரண மனிதராக இருக்கும் சக்திமான், அந்த ஊரில் தவறு நடக்கும்போது சக்திமானாக மாறி மக்களை காப்பாற்றுவார். இவரைப்பார்த்து வளர்ந்த நாமும், ஒரு நாளாவது சக்திமான் போல் மாற வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். அந்த அளவிற்கு இந்தத் தொடர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1997ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இதில் சக்திமான் ஆக முகேஷ் கண்ணா நடித்திருந்தார்.
இவரிடமே இந்தத் தொடருக்கான அனைத்து உரிமைகளும் உள்ளது. தற்போது சக்திமான் தொடரை திரைப்படமாக எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று பாகங்கள் கொண்ட திரை வரிசையாக உருவாக்க முகேஷ் கண்ணா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முகேஷ் கண்ணா கூறியிருப்பதாவது, என் கனவு நினைவாகிறது. சக்திமான் தான் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவாக என்றும் இருப்பார். அவரை நான் சூப்பர் ஆசான் என்று அழைப்பேன். இப்போது நாங்கள் அதை பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
இது எப்போதும் புதிதான எந்தக் காலத்துக்கும் ஒத்துப்போகும் கதை. எந்த நேரத்திலும் நல்லவற்றை கெட்டவை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. ஆனால் கடைசியில் நல்லதே வெல்லும்.
ஒரு தலைமுறையே சக்திமான் தொடரைப் பார்த்து வளர்ந்து, கற்றிருக்கிறது. 'சக்திமான் 2.0' வரும் என ரசிகர்களுக்கு கூறினேன். எனவே இந்தத் திரைப்படம் முயற்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் வளர்ந்த ரசிகர்களின் மீது எனக்கு அதிக பொறுப்பு இருப்பதாக நான் உணருகிறேன்.
வெற்றி உண்டாகட்டும் என்று எல்லோரிடமும் சொல்வேன். ஆனால் அதை இப்போது எனக்கே சொல்லிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இறைவன் என்னோடு இருக்க வேண்டும் என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் 'சக்திமான்' முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.