ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரை தலைநகராகக் கொண்டு ஹரியானா, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளை ஆண்ட சஹமன வம்சத்தின் மன்னரான பிருத்விராஜ் செளகான் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'பிருத்விராஜ்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகிறது. இப்படத்தில் இயக்குநர் சந்திரபிரகாஷ் தவிவேதி இயக்குகிறார்.
-
Sanyogita #Prithviraj pic.twitter.com/qVrQdkj8Ae
— Manushi Chhillar (@ManushiChhillar) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sanyogita #Prithviraj pic.twitter.com/qVrQdkj8Ae
— Manushi Chhillar (@ManushiChhillar) January 23, 2020Sanyogita #Prithviraj pic.twitter.com/qVrQdkj8Ae
— Manushi Chhillar (@ManushiChhillar) January 23, 2020
பயமறியா மன்னன் என்று புகழப்பட்ட மன்னர் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் நடிக்கிறார். இதில் மன்னரின் காதல் மனைவி சன்யோகியாக மனுஷி சில்லர் நடிக்கிறார்.
தற்போது மனுஷி சில்லர் தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன் மேக் ஆப் அறையில் சில்அவுட் முறையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப்படம் 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க: கண்களால் சொக்க வைக்கும் உலக அழகி! மனுஷி சில்லர் லேட்டஸ்ட்....