ETV Bharat / sitara

'எனது குறிக்கோளில் கவனம் செலுத்த செஸ் உதவியது' - மனுஷி சில்லர்

மும்பை: நடிகை மனுஷி சில்லர் தனது தந்தையுடன் சதுரங்கம் விளையாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மனுஷி சில்லர்
மனுஷி சில்லர்
author img

By

Published : Jul 20, 2020, 3:16 PM IST

முன்னாள் உலக அழகியும் நடிகையுமானா மனுஷி சில்லர் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தை மித்ரா பாசு சில்லாருடன் செஸ் விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”செஸ் உங்களது மனதின் பலத்தையும் கற்பனை வளத்தையும் வளர்க்க உதவும் ஒரு விளையாட்டாகும். இதில் அனைத்து நிலைகளிலும் நீங்கள், உங்கள் எதிரியை விட அதிகமாகச் சிந்திக்க வேண்டும்.

நான் எனது அப்பாவுடன் செஸ் விளையாடுவதை எப்போதும் விரும்புவேன். ஏனென்றால், அவர் மிகவும் புத்திசாலியான நபர். இதன் மூலம்தான் எனது அப்பா எனக்கு போட்டி மனப்பான்மை குறித்து எடுத்துரைத்தார். மேலும், எனது குறிக்கோளில் கவனம் செலுத்த இந்தச் செஸ் உதவியது. இதற்காக எனது அப்பாவிற்கு நான் நன்றி கூறுகிறேன்.

இந்தச் செஸ் விளையாட்டு மூலம் என் அப்பா என்னை ஊக்குவித்தார். இதில் நான் அவரை ஒரு முறையாவது செல்ல வேண்டும் என விரும்பினார். நான் ஏற்கனவே சொன்னது போல் அப்பா இந்த விளையாட்டில் மிகவும் புத்திசாலி. நான் அவரது மகள் என்றாலும், எனக்காக அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. மாறாக அவரை வெல்வதற்கு என்னை ஊக்குவித்தார்” என்றார்.

மனுஷி சில்லர் தற்போது பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிவரும் 'பிருத்விராஜ்' படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.