திரையுலகப் பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி வாடிக்கையாக நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அவரின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, அச்செய்தி உண்மையில்லை எனத் தெரியவந்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜிதேஷ் தாக்குர் என்பவர் குடிபோதையில் இதுபோன்று தொலைபேசியில் தகவல் பரப்பினார் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் கடந்த சில நாள்களாக ஷாருக்கானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நாய் சேகர்' பட ரிலீஸ் தேதி வெளியீடு