பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், சயிஃப் அலி கான், கஜோல் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள படம் 'தனாஜி: தி அன்சங் வாரியர்'. மராட்டியப் பேரரசில் ராணுவ தலைமைப் பொறுப்பு வகித்த தனாஜி மாலுசாரேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
உண்மைக் கதையை சாரம்சமாகக் கொண்ட இப்படத்தில் அஜய் தேவ்கான், தனஜி என்கிற போர் வீரராக வருகிறார். இது இவரது 100ஆவது திரைப்படம் என்பதால் படத்திற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. இப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
-
Thank you Uddhav Thackeray ji for declaring #TanhajiTheUnsungWarrior tax-free in the state of Maharashtra.@OfficeofUT @CMOMaharashtra@ajaydevgn @itsKajolD #SaifAliKhan @omraut @itsBhushanKumar @SharadK7 @ADFFilms @TSeries pic.twitter.com/2619VzV2Xf
— TANHAJI: The Unsung Warrior (@TanhajiFilm) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you Uddhav Thackeray ji for declaring #TanhajiTheUnsungWarrior tax-free in the state of Maharashtra.@OfficeofUT @CMOMaharashtra@ajaydevgn @itsKajolD #SaifAliKhan @omraut @itsBhushanKumar @SharadK7 @ADFFilms @TSeries pic.twitter.com/2619VzV2Xf
— TANHAJI: The Unsung Warrior (@TanhajiFilm) January 22, 2020Thank you Uddhav Thackeray ji for declaring #TanhajiTheUnsungWarrior tax-free in the state of Maharashtra.@OfficeofUT @CMOMaharashtra@ajaydevgn @itsKajolD #SaifAliKhan @omraut @itsBhushanKumar @SharadK7 @ADFFilms @TSeries pic.twitter.com/2619VzV2Xf
— TANHAJI: The Unsung Warrior (@TanhajiFilm) January 22, 2020
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையில் இணைந்து அவருடன் பல போர்களில் ஈடுபட்ட தனாஜியின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்மாநில அரசு வரி சலுகை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இப்படம் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையில் இணைந்து அவருடன் பல போர்களில் ஈடுபட்ட தனாஜியின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் மகராஷ்டிராவில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸூம், பல தலைவர்களும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட உத்தவ் தாக்கரே தனாஜி: தி அன்சங் வாரியர் படத்தை அமைச்சர்களுடன் பார்பேன் என்று கூறியிருந்தார். ஏற்கனவே இப்படத்திற்கு ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் வரி சலுகை அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..
இதையும் வாசிங்க: 'தனாஜி: தி அன்சங் வாரியர்' - 2ஆவது ட்ரெய்லர் வெளியீடு