நடிகர் ஆமிர்கான் நடிக்கும் இப்படம் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லால் சிங் சத்தா படக் குழு மே மற்றும் ஜூன் மாதங்களில் கார்கில் போர் காட்சியை படமாக்க முடிவுசெய்துள்ளது. படத்தின் கதைக்களத்திற்கு இந்தக் காட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆமிரின் குழுவின் ஒரு பிரிவு கார்கிலில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் காட்சிகளுக்காக குழுவினர் அங்கு 45 நாள்கள் தங்கி படப்பிடிப்பு நடத்த உள்ளனர். லடாக்கில் ஆமிர் தெலுங்கு நட்சத்திரம் நாக சைதன்யாவுடன் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. நாக சைதன்யா பாலிவுட்டில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
இந்தப் படம் டாம் ஹாங்க்ஸ் நடித்த 1994 ஹாலிவுட் ஹிட் ஃபாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
அத்வைத் சந்தன் இயக்கிய லால் சிங் சத்தா திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை ஒட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.