இயக்குநர் ஹோமி அடஜானியா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் இர்ஃபான்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அங்ரேஸி மீடியம்'. காமெடி டிராமாவாக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் மார்ச் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடித்துள்ளார்.
இந்நிலையில், கரீனா தனது சகோதரி கரீஷ்மா கபூர் நடிப்பில் உள்ள 'மெண்டல்ஹுட்' இணையத்தொடரின் சிறப்பு காட்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கரீனா, 'அங்ரேஸி மீடியம்' குறித்து கூறுகையில், "நான் இப்படத்தில் இணைந்து பணியற்றியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால் இர்ஃபானுடன் நடித்துள்ளேன். அவர் மிக சிறந்த நடிகர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அப்படி பட்ட ஒருவருடன் இணைந்து நடித்ததை மிகப்பெரிய கெளரவமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். இப்படத்தில் அவர் இருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே நடிக்க சம்மதித்தேன்", என்றார்.
இர்ஃபான் தற்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இர்ஃபான் 'அங்ரேஸி மீடியம்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியமால் இருப்பது அவருடைய ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. இயக்குநர் ஹோமி அடஜானியா இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு இர்ஃபான் நடிப்பில் வெளியான 'இந்தி மீடியம்' படத்தின் இரண்டாம் பாகமே 'அங்ரேஸி மீடியம்' என்பது குறிப்பிடத்தக்கது.