பாலிவுட் முன்னணி பிரபலங்களான சைஃப் அலிகானும் கரீனா கபூரும் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார். சைஃப் அலிகானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவரின் முதல் மனைவியான அமிர்தா சிங்குக்கு சாரா அலிகான், இப்ராஹிம் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் சாரா அலி கான் தற்போது பாலிவுட்டில் நாயகியாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான கரீனா கபூர் பிப்ரவரி 21ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி கரீனா கபூர் இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தையின் முகத்தை காட்டாமல் முதன் முறையாக சமூகவலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது அன்னையர் தினமான மே 9ஆம் தேதி கரீனா கபூர் தனது சமூகவலைதளப்பக்கத்தில், மூத்த மகன் தைமூர் தனது மடியில் தனது சகோதரனை வைத்திருக்கும் கறுப்பு - வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர், "இவர்கள் இருவரும் எனக்கு நம்பிக்கையை தருகின்றனர். ஒரு நல்ல எதிர்காலத்திற்காக. அழகான வலிமையான தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.