பாலிவுட் நடிகை கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமான பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், நடிகையும் சகோதரியுமான கரிஷ்மா கபூர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட பூமராங் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கரீனா கபூர் கண்ணாடியின் முன் அமர்ந்திருப்பதையும், அவர் அருகில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவரும் இருக்கிறார். விரைவில் அம்மாவாகும் கரீனா கபூருடன் படப்பிடிப்பு தளத்தில், சகோதரியுடன் பணியாற்றுவது சிறப்பான ஒன்று என கரிஷ்மா பதிவிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமான கரீனா முதல் முறையாக வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.