ETV Bharat / sitara

இஸ்ரேலுக்கு ஆதரவளித்த கங்கனா, கலாய்த்த நெட்டிசன்கள்: பன்ச் டயலாக் மூலம் பதிலடி தந்த சர்ச்சை நாயகி! - சினிமா

முன்னதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும், இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையிலும் கங்கனா பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரது வரலாற்று அறிவை கேள்விக்குள்ளாக்கி, அவரை வழக்கம்போல் நெட்டிசன்கள் கேலி செய்து வந்தனர்.

கங்கனா
கங்கனா
author img

By

Published : May 17, 2021, 10:30 PM IST

இஸ்ரேல்-பாலஸ்தீன் எல்லைப் பகுதியான காசாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயங்கரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கமும் மாறி மாறி நடத்தி வரும் தாக்குதலில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து தன் சர்ச்சைக் கருத்துகளால் லைம்லைட்டில் இருக்கும் கங்கனா, இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாகவும், இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையிலும் கங்கனா பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து அவரது வரலாற்று அறிவை கேள்விக்குள்ளாக்கி, அவரை வழக்கம்போல் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், தன்னைக் கேலி செய்த நெட்டிசன்களை சாடியும் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்கனா பகிர்ந்துள்ளார்.

நேற்று (மே.16) இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை விளக்கும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த கங்கனா, இது பல தசாப்தங்களாக நடப்பதாகவும், கடந்த சில நாள்களில் இஸ்ரேல் பிரச்சினை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய நெட்டிசன்களை சாடியும் உள்ளார்.

"இஸ்ரேல் எவ்வாறு உருவானது என்பதை இந்த வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. அது ஒரு சட்டவிரோத நாடு அல்ல, அவர்கள் ஆங்கிலேயரிடமிருந்து அந்நாட்டை திரும்பப் பெற்று அங்கு குடியேறியபோது, ஆறு முஸ்லீம் நாடுகள் இணைந்து யூதர்களைத் தாக்கின.

அன்றிலிருந்து அவர்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேல் மேலும் மேலும் நிலங்களைக் கைப்பற்றுகிறது. நீங்கள் ஒரு போரை வென்றால், இதுதான் நடக்கும். இங்கே அழுகிறவர்கள், எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் அனைவருக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். குழந்தைகளா... நான் எல்லா தந்தைகளுக்கும் தாய்” என பன்ச் டயலாக் கூறி பதிலடி தந்துள்ளார்.

முன்னதாக ட்விட்டரில் தொடர்ந்து தவறான கருத்துகளைப் பதிவிட்டு வந்த கங்கனாவின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஸாவில் மோசமடையும் தாக்குதல்: அண்டை பகுதிக்கு குடிபெயரும் பாலஸ்தீனியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.