மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் 2016ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் முதன் முறையாக போர் விமானங்களை இயக்கிய பெண்கள் குறித்த தேஜஸ் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இத்திரைப்படத்திற்காக கடுமையான உழைத்துவரும் கங்கனா ரனாவத் நேற்று தேஜஸ் படக்குழுவினருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆசிபெற்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கங்கனா, தேஜஸ் திரைப்படத்தின் கதையினை பாதுகாப்புத் துறையினர், இந்திய விமானப் படையினருக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.
கடந்த வாரம் இந்திய விமானப்படை குறித்து அனில் கபூர் நடித்த ஓடிடி திரைப்படமான ஏகே விர்சஸ் ஏகே திரைப்படத்திற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அப்படக்குழுவினர் மன்னிப்பு கோரியிருந்தனர்.
இதற்கிடையில், இந்திய விமானப்படை குறித்த திரைப்படத்தில் நடித்துவரும் கங்கனா படக்குழுவினருடன் பாதுகாப்புத் துறை அமைச்சரையும், விமானப் படையினரையும் சந்தித்து படத்தின் கதை குறித்து ஆலோசித்துள்ளார்.
இதையும் படிங்க: விமானப் பெண் லுக்கில் கங்கனா - தேஜஸ் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!