ETV Bharat / sitara

மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கிய ரேவதி - கஜோலுடன் கூட்டணி - கஜோலின் படங்கள்

நடிகை ரேவதி இயக்கும் புதிய படத்தில் நடிகை கஜோல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Kajol
Kajol
author img

By

Published : Oct 7, 2021, 1:32 PM IST

தென்னிந்கிய சினிமாவில் 1980 - 1990 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தவர் ரேவதி. இவர் நடிகையாக மட்டுமல்லாது இயக்குநராகவும் இருக்கிறார்.

'மித்ர் மை பிரெண்ட்' என்னும் படத்தை ரேவதி 2002ஆம் ஆண்டு இயக்கினார். இதில் ஷோபனா, நாசர் அப்துல்லா, ப்ரீத்தி விசா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த திரைப்படம், ஷோபனாவுக்கு சிறந்த நடிகை, சிறந்த எடிட்டிங் என மூன்று தேசிய விருதுகளை வென்றது.

இப்படத்தைத் தொடர்ந்து ரேவதி பிர் மிலேங்கே என்னும் படத்தை 2004ஆம் ஆண்டு இயக்கினார். எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி எடுக்கப்பட்ட இப்படத்தில் சல்மான் கான், ஷில்பா ஷெட்டி, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இயக்குநராகவும் நடிகையாகவும் சினிமாவில் வலம்வந்த ரேவதி தற்போது கஜோலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். 'தி லாஸ்ட் ஹர்ரே' (TheLastHurrah) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

புன்னகை முகத்துடன் தனக்கு வரும் தடைகளைக் கடந்துசெல்லும் சுஜாதா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. தற்போது இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

'தி லாஸ்ட் ஹர்ரே' (TheLastHurrah) படத்தை ப்ளைவ் புரொடக்ஷன்ஸ், டேக் 23 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சம்மீர் அரோரா இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: கமலின் அடுத்த படத்தில் இணைகிறாரா ரேவதி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.