ETV Bharat / sitara

கங்கனாவின் 'தலைவி' வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பு! - தலைவி திரைப்படம்

கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவி' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Thalaivi
Thalaivi
author img

By

Published : Apr 10, 2021, 1:40 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையை அதிகரித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளைப் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் படத்தின் ட்ரெயலர் கங்கனாவின் பிறந்தநாளான மார்ச் 23ஆம் தேதி வெளியானது. முன்னதாக இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது பட வெளியீட்டுத் தேதியை தள்ளிவைத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்து.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மிக சவாலான இந்தப் பயணத்தில் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை தந்த படக்குழுவைச் சார்ந்த ஒவ்வொருக்கும் எங்களது நன்றிகள். பல மொழிகளில் உருவாகியுள்ள 'தலைவி' திரைப்படம் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியாகவிருந்தது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையலும்கூட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து நாங்கள் படத்தை ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடத் தயாராக இருக்கிறோம். இருந்த போதிலும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 'தலைவி' படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளிவைக்க நாங்கள் முடிவெடித்துள்ளோம். உங்களின் அன்பு தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.