ஹைதராபாத்: கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக ஜான்வி கபூர் பஞ்சாப் சென்றிருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிபெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சித்தார்த் சென்குப்தா இயக்கும் இதன் படப்பிடிப்பு ஜனவரி 9ஆம் தொடங்கவுள்ளது. இதற்காக ஜான்வி 45 நாட்கள் ஒதுக்கியிருக்கிறார்.
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு பெரிதாக மேக்கப் இருக்காது, அதேபோல் ரொமாண்டிக் ட்ராக் கிடையாது. ஆனால், இந்தப் படத்தில் இந்தி மார்கெட்டுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஜான்வி கபூர் நடிப்பில் கடைசியாக ‘குஞ்சன் சேக்செனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் வெளியானது. அவர் நடித்த ரூஹிஅஃப்சா, தக்த், தோஸ்தான் 2 ஆகிய படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளன.