மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் 'தடக்' என்ற இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய ஊரடங்கால், வீட்டில் இருக்கும் ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் வாரணாசியில் எடுத்த காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்தக் காணொலியானது தடக் படப்பிடிப்பின் இடைவேளையின்போது எடுக்கப்பட்டதாகும். "மிஸ் யூ வாரணாசி" என்று இன்ஸ்டாகிராமில் ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில் சல்வார் உடையில் தோற்றமளிக்கும் ஜான்வி கபூர் படகில் அமர்ந்து கங்கை ஆற்றில் யாத்திரை செய்யும்போது ஈரக்காற்று அவரது தலை முடியை கோதிச்செல்கிறது. இவரின் இந்தக் காணொலி தற்போது இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.