ETV Bharat / sitara

'வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' - ஜான்வி கபூர் - ஜான்வி கபூரின் கரோனா தொற்று விழிப்புணர்வு வீடியோ

தற்போதைய சூழலில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்த தீர்வாகும் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

Janhvi Kapoor
Janhvi Kapoor
author img

By

Published : May 20, 2020, 5:08 PM IST

பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் வீட்டில் பணிசெய்யும் நபர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போனி கபூர் தரப்பில் வெளியான அறிக்கையில், "போனி கபூர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 23 வயது நபர் ஒருவர் சமீபத்தில் உடல் நலமின்றி இருந்ததையடுத்து, அவருக்கு உடனடியாகக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார். மும்பை மாநகராட்சி அலுவலர்கள் அவருக்குத் தேவையான ஆலோசனையை வழங்கி வருகின்றனர்.

மேலும் போனி கபூர், அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எனினும், போனி கபூர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். கரோனா பாதிப்புக்குள்ளான நபர் விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறப்பட்டது.

இதனையடுத்து இவரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில், ”தற்போது வீட்டிலேயே இருப்பது சிறந்த தீர்வாகும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அவளுடன் அம்மாவின் அரவணைப்பைப் பகிர எனக்கு பிடிக்காது' - ஜான்வி கபூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.