ETV Bharat / sitara

சிறுத்தைகள் காப்பகத்தில் சாகச சுற்றுலா! இணையத்தைக் கலக்கும் ஜெனிலியா -ரித்தேஷ் தேஷ்முக் குடும்பம்! - ஜெனிலியா

பிரபல பாலிவுட் ஜோடியான ஜெனிலியா - ரித்தேஷ் தேஷ்முக் தம்பதியினர் இந்தியாவின் பிங்க் சிட்டியான ஜெய்ப்பூரிலுள்ள ஜலானா சிறுத்தைகள் காப்பகத்தில் தங்கள் குழந்தைகளுடன் திகிலான சஃபாரி பயணம் மேற்கொண்ட வீடியோவை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Genelia Riteish
Genelia Riteish couple
author img

By

Published : Jan 8, 2020, 9:29 PM IST

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி, சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமப்புத்திரன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஜெனிலியா, பின்னர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து விலகினார்.

தொடர்ந்து அவ்வப்போது குழந்தைகளுடன் தங்களது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்துவரும் இந்த அபிமான ஜோடி, சமீபத்தில் இந்தியாவின் பிங்க் சிட்டியான ஜெய்ப்பூரில் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா மேற்கொண்டு மகிழ்ந்துள்ளனர்.

ஜெய்ப்பூரிலுள்ள ஜலானா சிறுத்தைகள் காப்பகத்தில் சாகசங்கள் நிறைந்த சஃபாரிப் பயணம் மேற்கொண்டு தங்கள் சுற்றுலாவை இவர்கள் கொண்டாடியுள்ளனர்.

தங்களது இன்ஸ்டா பக்கத்தில் சாகசப் பயணம் மேற்கொண்ட இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நடிகை ஜெனிலியா ”இந்த புது வருடத்தை முன்னிட்டு எங்கள் குழந்தைகளை ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்றதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா உண்மையாகவே வியப்பிற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெனிலியா - ரித்தேஷ் தேஷ்முக் தம்பதியினரின் குழந்தைகள் உற்சாகத்துடன் பயணிக்கும் இந்த வீடியோ அவர்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

இதையும் படிங்க: பயத்தில் உறைய வைக்க மீண்டும் வருகிறது 'ஈவில் டெட்'

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.