'தன்ஹாஜி' படத்தையடுத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், 'ஆதிபுருஷ்'. 'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியை படமாக்கும் இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் 'ஆதிபுருஷ்', மிக பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இப்படம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஜானகி கதாபாத்திரம்
இதையடுத்து ஜூலை மாதம் மீண்டும் படப்பிடிப்பை ஆதிபுருஷ் படக்குழு ஆரம்பித்தது. இப்படத்தில் க்ரிட்டி சனோன் ஜானகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து படக்குழு அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
முடிவுக்கு வந்த பயணம்
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட க்ரிட்டி சனோன் கூறுகையில், "இந்த பயணம் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதில் நான் நடித்த ஜானகி கதாபாத்திரம் என் இதயத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும். ஜானகி கதாபாத்திரத்திற்கு நான் சரியானவள் என நம்பி எனக்கு வாய்ப்பு வழங்கிய ஓம் ராவத்துக்கு நன்றி.
ஆதிபுருஷ் படத்தில் இணைந்து பணியாற்றிய பிரபாஸ், சைஃப் அலிகானுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றிய நேரம் மிக அருமையானது" என பதிவிட்டுள்ளார். ஆதிபுருஷ் அடுத்தாண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: பிரபாஸின் ஆதிபூருஷ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு