ETV Bharat / sitara

சிறு நகரங்களுக்குத் திரும்பும் இந்தி சினிமாவை வரவேற்கும் ’பிக் பி’!

author img

By

Published : Jun 13, 2020, 4:10 AM IST

சிறு நகரங்களை மையப்படுத்தி மீண்டும் இந்தி சினிமாக்கள் எடுக்கப்படுவது ஆரோக்கியமான போக்கு என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ’குலாபோ சிதாபோ’ திரைப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரின் திரைப்படம் எனும் பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

லக்னோவை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சிறு நகரங்களை மையப்படுத்தி மீண்டும் இந்தி சினிமாக்கள் எடுக்கப்படுவது ஆரோக்கியமானது என்றும், இது பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் தாங்கள் வளர்ந்த இடங்களை மீண்டும் பார்வையிட வேண்டும் என்ற விருப்பத்திலிருந்து உருவான ’வரவேற்கத்தக்க போக்கு’ என்றும் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

அமிதாப், ஆயுஷ்மான் இடையே நடைபெறும் ரகளையான சண்டையை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநரிடம் கேள்வி எழுப்பும் ஆள், தான் அல்ல என்றும் அமிதாப் தெரிவித்துள்ளார்.

குலாபோ சிதாபோ திரைப்பட இயக்குநர் சிகாருடன், பிகு, பிங்க், திரைக்கு வராத திரைப்படமான ஷூபைட் ஆகிய திரைப்படங்களில் ஏற்கனவே அமிதாப் பணிபுரிந்துள்ள நிலையில், ஆயுஷ்மானுடன் ஒரு முழு நீள திரைப்படத்தில் முதல்முறையாக அவர் இணைந்துள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும் லக்னோவில் நடந்த படப்பிடிப்பு மகிழ்ச்சியான ஒன்று எனவும், லக்னோ மக்கள் தங்கள் படப்பிடிப்பிற்கு சரியான புரிதலுடன் முழு ஆதரவு அளித்தனர் என்றும் அமிதாப் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் புதுமையான தோற்றத்தில் நடித்துள்ள அமிதாப், முன்னதாக பா, 102 நாட் அவுட் ஆகிய படங்களிலும் தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமேசானில் வெளிவரும் அபிஷேக் பச்சன் நடித்த வெப் சீரிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.