ETV Bharat / sitara

எம்மி விருது... 3 இந்திய தொடர்கள்... ராதிகா ஆப்தே முதல் அனுராக் காஷ்யப் வரை! - லஸ்ட் ஸ்டோரீ

எம்மி விருது இந்திய கலைஞர்களுக்கோ படைப்புகளுக்கோ கிடைக்கவில்லையென்றாலும் இந்த விருதுக்கு இந்திய தொடர்கள் பரிந்துரை செய்திருப்பதே பெரும் விருதாக கருதுகின்றனர் இணையவாசிகள்.

Emmy
Emmy
author img

By

Published : Nov 26, 2019, 3:18 PM IST

அமெரிக்காவில் இயங்கிவரும் 'இன்டர்நேஷனல் அகாடெமி ஆஃப் டிவி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' என்ற அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர பொழுதுபோக்கு தொடர்களின் ஆஸ்கர் என்று இந்த விருது அழைக்கப்படுகிறது.

Emmy
எம்மி விருதில் பங்குகொண்ட இந்திய திரைத்துறை பிரபலங்கள்

மொத்தம் 11 பிரிவுகள், 21 நாடுகள், 44 பிரிவுகள் என பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இந்தியா, இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், கத்தார், சிங்கப்பூர், தென் ஆப்பரிக்கா, தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில், நெட்ஃபிலிக்ஸில் ஒளிபரப்பான 'சேக்ரட் கேம்ஸ்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' தொடர்களும் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் மியூசிக்கல் ரியாலிட்டி இணைய தொடரான 'தி ரீமிக்ஸ்' தொடரும் எம்மி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் இந்திய தொடர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இணையத் தொடர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த நடிகைக்கான பிரிவில் நடிகை ராதிகா ஆப்தே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்விருதுக்கான விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கரண் ஜோஹர், நடிகை ராதிகா ஆப்தே, நடிகர் நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராதிகா ஆப்தே, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். நாவாசுதின் சித்திக் நடித்த 'mcmafia' என்ற தொடர் சிறந்த டிராமாக்கான பிரிவில் விருது வாங்கியது.

இந்த விழாவில் இந்திய கலைஞர்களுக்கோ படைப்புக்களுக்கோ விருதுகள் கிடைவில்லை என்றாலும்; எம்மி விருதுகளுக்கு இத்தனை பேர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதே பெரும் விருதாக கருதப்படுவதாக இணையவாசிகள் வாழ்த்து இக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Intro:Body:

Emmys-2019-lust-stories-sacred-games-bag-no-award-nawazuddin-siddiqui-s-mcmafia-wins-best-drama-series

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.