நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் பாலிவுட் திரைத்துறையையே உலுக்கியது. இதுகுறித்து திரைத்துறையினர் பலரின் மீது புகார் எழுப்பப்பட்டது. சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக திரைத்துறையினர் பலரை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி விசாரணைக்காக பாந்தரா காவல் நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு அவரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு சஞ்சய் லீலா பன்சாலி தனது வழக்கறிஞர்களுடன் சென்றிருந்தார்.
அப்போது காவல்துறையினரிடம் அவர், சுஷாந்திற்கு ராம் லீலா (2013), பாஜிராவ் மஸ்தானி (2015), பத்மாவத் (2018) உள்ளிட்ட நான்கு படங்களுக்கு தான் அணுகியதாக கூறியுள்ளார்.
ஆனால் அந்த நேரத்தில் சுஷாந்த் சிங் யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்.ஆர்.எஃப்) உடன் ஒப்பந்தம் செய்து இருந்ததால் அவருடைய கால்ஷீட் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.