டெல்லி: ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், பியானோ இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொண்டு அதை இசைக்கும் சிறிய காணொலியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
"ஊரடங்கு அமலுக்கு வந்து ஏழாவது நாள் ஆகியுள்ள நிலையில், இந்த நேரத்தை அனைவரும் ஏதாவது ஒன்றை கற்று பயனுள்ளதாகச் செலவழித்து வருகிறீர்கள்" என்று நம்புவதாகத் தெரிவித்துள்ள ஹிருத்திக் ரோஷன், 21 நாள்கள் பியானோவில் இசைக்க கற்றுக்கொண்டதை அந்த இசைக்கருவியில் வாசித்து காண்பித்துள்ளார்.
வாசிப்புக்குப் பின் பேசிய அவர், "எனக்கு ஒரே கையில் இரண்டு கட்டை விரல்கள் இருப்பதால் அவ்வளவு சிறப்பாக வாசிக்க முடியவில்லை. கொஞ்சம் அசெளகரியமாக உணர்கிறேன். இருந்தபோதிலும் நான் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கி முயற்சி செய்துள்ளேன். நீங்களும் தொடர்ந்து விரும்பியதைக் கற்றுக்கொள்ளுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும்விதமாக விதாந்து செயலியை (மெய்நிகர் கற்றல் செயலி) பயன்படுத்திவரும் குழந்தைகளுக்கும் தனது பாராட்டுகளை இந்தக் காணொலியில் தெரிவித்துள்ளார்.
"விதாந்து செயலியின் உதவியுடன் 21 நாள்கள் கற்றல் சவாலால் ஈர்க்கப்பட்டு பியானோ வாசிக்க கற்றுக்கொண்டுள்ளேன். கூடுதல் தகவலாக, பியானோ வாசிப்பதன் மூலம் மூளையின் இருபக்கங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன" என்று காணொலிக்கான பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிருத்திக் தனது வீட்டில் அமர்ந்தவாறு பதிவிட்டிருக்கும் இந்தக் காணொலிக்கிடையே பின்னணியில் அவரது முன்னாள் மனைவி சுஷான் கான் நடந்து செல்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையடுத்து "வீட்டில் வடிமைப்பை மாற்றி அமைக்கும் பணிகளில் சுஷானா ஈடுபட இருக்கிறார். இதற்காக வீட்டின் வடிவமைப்புகளை அவர் கூர்ந்து கவனித்துவருகிறார்" என்று ஹிருத்திக் பதிவிட்டுள்ளார்.