ETV Bharat / sitara

கரோனா எதிரொலி: சுத்தம் செய்யும் பணியில் இறங்கிய தீபிகா படுகோனே! - கரோனா பாதிப்பு

கரோனா காரணமாக வீட்டில் இருக்கும் தீபிகா படுகோனே தனது அலமாரியை (wardrobe) சுத்தம் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Deepika
Deepika
author img

By

Published : Mar 16, 2020, 8:29 PM IST

சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கரோனா) என்ற வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய, இந்தத் தொற்று காரணமாக உலகளவில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது அனைத்து வித படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள், பயணங்கள், ஃபேஷன் வீக் போன்றவற்றை ரத்து செய்து வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அலமாரியில் (wardrobe) உள்ள ஆடைகளை அனைத்தையும் வெளியே எடுத்து சுத்தப்படுத்தும் பணிகளை செய்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பாரீஸில் நடைப்பெற்ற இருந்த ஃபேஷன் வீக்கில் கலந்துக்கொள்ள இருந்த தீபிகா படுகோனே, கரோனா காரணமாக ரத்துசெய்தார். தற்போது முழு நேரமும் வீட்டில் இருந்துக்கொண்டு தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டும், கபில் தேவ் தலைமையிலான அணி மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவாகியுள்ள திரைப்படம் ’83’

கபீர் கான் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாக நடித்துவரும் நிலையில், கபில் தேவின் மனைவி ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோனே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: ஹோலிக்கும் எனக்கு ஆகவே ஆகாது - தீபிகாவை சங்கடத்தில் ஆழ்த்திய சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.